உல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன்! காதலி கொடுத்த தண்டனை! அம்மாடியோவ்!

0
2
உல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன்
உல்லாசமாக இருந்துவிட்டு உதறிய காதலன்

கும்பகோணம் அருகே கடம்பக்குடி சோழபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராணி (30). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (33). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இருவரும் வீட்டிற்கு தெரியாமல் செல்போனில் பேசி பேசி தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள். ராணியும், மாரிமுத்துவும் காதல்வானில் சிறகடித்து பறக்க தொடங்கினர்.

காதல் கிறக்கத்தில் காதலனின் ஆசைவார்த்தையை நம்பி தன்னை கொடுத்திருக்கிறார் ராணி. ருசி கண்ட பூனை சும்மா விடுமா என்பது போல ராணியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் மாரிமுத்து.

அதன் விளைவு ராணி கர்ப்பமானார். இதனை தனது காதலன் மாரிமுத்துவிடம் தெரிவித்திருக்கிறார் ராணி. அதிர்ச்சிடையந்த மாரிமுத்து ராணியிடம் நைசாக பேசி கருவை கலைத்துவிட்டார்.

அதன் பின்னரும் ராணியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்திருக்கிறார். இரண்டாவது முறையாக ராணி கர்ப்பம் ஆனார்.

இந்த முறையும் கருவை கலைக்க சொல்லியிருக்கிறார் மாரிமுத்து. ஆனால் ராணியோ மறுத்துவிட்டார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரிமுத்துவை வற்புறுத்தியிருக்கிறார்.

இதனையடுத்து கடந்த சில மாதங்களாக ராணியுடனான தொடர்பை துண்டித்துவிட்டார் மாரிமுத்து. செல்போனில் அழைத்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார் மாரிமுத்து.

இந்நிலையில் செய்வதறியாது முழித்த ராணி நேராக மாரிமுத்து வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார். அதற்கு மாரிமுத்துவோ கர்ப்பமான உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ராணி, தன்னை காதலிப்பதாக கூறி கற்பழித்து ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.