ஆண்களை விட பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு விஷயம் – ஹெல்த் டிப்ஸ்

0
1
ஆண்களை விட பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு விஷயம்
ஆண்களை விட பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய ஒரு விஷயம்

ஆண்களை விட பெண்கள் ஒரு சில விஷயங்களில் சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும் இருப்பார்கள்.

அது உண்மை தான் என்று கூறலாம். பல சூழல்களில் அப்பா, கணவன், அண்ணன், காதலன், சகோதரன் இது போன்று எந்த ஒரு ஆண் உறவினாலும், பெண்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை புரிந்து கொள்ளவே முடியாது.

ஏனெனில், ஒருசில விஷயங்களில் பெண்கள் அடம்பிடிப்பது, சிறு குழந்தைகளை போன்று நடந்துக் கொள்வது, இதுபோன்ற செயல்பாடுகள் தான் அதற்கு காரணமாகும்.

பெண்களிடம் புரிந்துக் கொள்ள முடியாத விஷயங்கள் என்ன?
  • பெண்கள் தான் காதலிக்கும் ஆண்கள் தன்னுடன் ஒவ்வொரு நாளும் முழுவதுமாக அன்பாக, அக்கறையாக பேசிக் கொண்டு இருக்க வேண்டும். என்று நினைப்பார்கள். இல்லையெனில் அவர்கள் தன்னை காதலிக்கவில்லை என்று கூறுவார்கள்.
  • பெண்கள் தன்னை அலங்கரிக்கும் போது, உடுத்தும் உடையிலிருந்து, உதட்டு சாயம், காலணிகள் வரை அனைத்தும் ஒரே நிறத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் அந்த விஷயத்தில் ஒருசில பெண்கள் ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதை விட, பெண்கள் பொறாமை பட வேண்டும் என்று நினைப்பார்கள்.
  • பெண்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் ஒரு புதிய ஆடைகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் புதிய ஆடைகள் அவர்களிடம் நிறைய இருந்தாலும் ஆடைகளே இல்லை என்று கூறுவார்கள்.
  • பெண்கள் தன்னை பற்றி கவலைப் பட வேண்டாம் என்று கூறினால், அதற்கு நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொள்ளவில்லை அவர்களுக்கு உங்கள் மேல் கோபம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று அர்த்தமாகும்.
  • பெண்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை அல்லது எந்த ஒரு விஷயமாக இருப்பினும், அதை நேர்க்கோட்டில் கூறுவதை விடுத்து, தலையை சுற்றி மூக்கை தொடும் வகையில் அதிகமாக பேசுவார்கள்.
  • ஸ்லிம்மாக இருக்கும் பெண்கள் புதிதாக ஒருமுறை புடவை உடுத்திக் கொண்டு வரும் போது, அவர்களை பார்த்து நீ குண்டாக இருக்கிறாய் என்று கூறிவிட்டால் போதும் அதற்கு உடனே அவர்கள் நான் குண்டாக தெரிகின்றனா என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.