3000 ஆபாச இணையதளங்கள்! களத்தில் இறங்கிய சைபர்கிரைம்! அதிர்ச்சியூட்டும் தகவல்!

0
1
ஆபாச இணையதளங்கள்
ஆபாச இணையதளங்கள்

இன்றைய நவீன உலகில் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சி எந்தளவுக்கு நன்மைகள் தருகிறதோ, அதே அளவிற்கு கெடுதல்களையும் விளைவிக்கின்றன.

இணையதளங்களின் மூலம் இன்று உலகில் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தற்போது ஸ்மார்ட் போன் வந்த பிறகு இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

மேலும் இணையதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை சில விஷமிகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்காகவே பல இணையதளங்கள் செயல்பட்டும் வருகின்றன.

இதனால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதற்கு இணையதளமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி சிபிஐ ஆல் பரிந்துரைக்கப்படும் ஆபாச இணையதளங்களை சைபர் க்ரைமுடன் இணைந்து மத்திய அரசு அவ்வப்போது முடக்கி வருகிறது.

இந்நிலையில் தற்போது 3000க்கம் அதிகமான ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.