நம்மை சுற்றியுள்ளவர்கள் யார் என்று இறந்த பிறகு தான் தெரியுமோ?

0
1

குறும்படங்கள் தற்போது வெள்ளித்திரைக்கு நிகராக தங்கள் கருத்துக்களை சொல்கிறது. வளர்ந்து வரும் இயக்குனர்கள் எல்லோரும் முதலில் குறும்படங்களையே எடுத்தனர். அந்த வகையில் புதிய படைப்பாக வந்திருக்கிறது You Too Brutus என்ற குறும்படம்.

இந்த கதையில் என்ன கருத்து என்றால் ஒரு மனிதன் இறந்தபின்பு தான் நம்மை சுற்றியுள்ளவர்களில் யார் நல்லவர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என தெரிந்து கொள்ள முடியும் என்பதை நகைச்சுவையோடு வெளிப்படுத்தியுள்ளனர்.

நாம் உயிருடன் இருக்கும் பொழுது நம்மை மதிப்பவர்கள் யார் என்று அறியாமல் அவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பதையும் சிறப்பாகவே காட்டியுள்ளனர். இதை பார்த்த பிறகு உங்கள் வாழ்கையில் யார் உங்களுக்கு முக்கியம் என்று நீங்களே சிந்தித்து பாருங்கள்.