டைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.!

0
5
உள்ளாடை
உள்ளாடை

ஆண்கள் எப்போதும் தரமானதாக உள்ளாடைகளை அணிய வேண்டும். ஏனெனில் தரமில்லாத மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் ஆண்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இறுக்கமான ஆடைகள் அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

உள்ளாடைகள் இறுக்கமாக அணியும்போது, உடலில் வெப்பம் அதிகமாகின்றது, இதனால் விந்தணுவின் வளர்ச்சியை தடுத்து உறிஞ்சுகிறது.

மேலும், கருத்தரிக்கும் திறனை வெகுவாக குறைத்து விடுகின்றது.
மலட்டுத்தன்மை பிரச்சனைகள் வருவதற்கு இறுக்கமான உள்ளாடைகளே காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு தெரிவிப்பது என்ன?

ஆடைகள் பற்றி ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது, இதில் உள்ளாடை அணியாமலும், பலதரப்பட்ட தரங்களில் உள்ளாடைகளை அணிவதற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியவந்துள்ளது.

ஆய்வு இறுதியில், அதிகமான வெப்பநிலை காரணமாக விந்தணுக்கள் உற்பத்தி பெருமளவு பாதிக்கிறது. ஆனால் உள்ளாடை அணியாமல் இருந்தாலும், ஒரு சில பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகின்றது.

எப்படி சரிசெய்யலாம்:

ஆண்கள் ஒவ்வொருவரும் தங்களது உடலின் வெப்பநிலைக்கு ஏற்றார் போல் உள்ளாடைகள் அணிவது அவசியம்.

உடலுக்கு ஏற்றார் போன்று ஆடைகளை அணிந்தால் விந்தணு உற்பத்தி அதிகமாகும், கருவும் எளிதில் வளரும்.