உடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது..! மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…!!

0
1
கல்லூரி
கல்லூரி

உடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது..! மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…!!

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி உபாசனா. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாகம் சில வித்தியாசமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில் ஒன்று விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் உடை மாற்றும்போது கதவை மூடக் கூடாது என்பதாகும்.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால் மாணவிகள் உடைகளுக்குள் மறைத்து செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் இப்படி ஒரு வித்தியாசமான உத்தரவை போட்டுள்ளது.

இதற்கு மாணவ மாணவிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் மாணவிகளின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.