இறந்த காதலனின் உயிரணு மூலம் கருத்தரிக்கும் காதலி..!! ஆஸ்திரேலியாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!

0
1
இறந்த காதலனின் உயிரணு மூலம் கருத்தரிக்கும் காதலி

ஆஸ்திரேலியாவில் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தனது காதலனின் உயிரணு மூலம் காதலி கருத்தரிக்க முடிவெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியையை ஏற்படுத்தியுள்ளது.இந்த முடிவுக்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் TOOWOOMBA பகுதியை சேர்ந்த ஜோஸ்வா டேவிஸ், அய்லா கிரஸ்வெல் ஜோடி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

TOOWOOMBA பகுதியின் ரக்பி வீரரான ஜோஸ்வா தனது காதலியான அய்லா கிறிஸ்வெலை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஜோஸ்வா சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மிகவும் உடைந்துப்போன அய்லா, ஒரு அதிரடி முடிவை தமது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். தனது காதலர் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறந்த ஜோஸ்வாவின் உயிரணுவில் இருந்து கருத்தரிக்க முடிவு செய்தார். அய்லாவின் இந்த முடிவுக்கு இரு குடும்பத்தினருக்கும் ஆதரவளித்தனர்.

விளையாட்டு வீரர்கள் தங்கள் உயிரணுவை மருத்துவமனையில் சேமித்து வைப்பதுப்போல் ஜோஷ்வாவும் சேமித்து வைத்திருந்தார்.

இதற்காக அய்லா, நீதிமன்றத்தை நாடி, ஜோஷ்வாவின் உயிரணுவை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார். நீண்ட வாதங்களுக்கு பிறகு நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.

இதனை தொடர்ந்து வெகு விரைவில், செயற்கை கருத்தரித்தல் மூலம் அய்லா,ஜோஸ்வாவின் குழந்தையை தனது வயிற்றில் சுமக்க உள்ளார் .மேலும் அய்லாவின் இந்த முடிவுக்கு பல காதலர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.