ஒலும்பிக் நகரில் இரவில் நடந்த நடந்த சில காம லீலைகள்- ஒரு ஆணுக்கு 42 ஆணுறை விகிதம் இருந்ததாம்

0
1
ஆணுறைகள்
ஆணுறைகள்

நடந்து முடிந்திருக்கிற ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டி, ஸிகா வைரஸ், சுகாதாரச் சீர்குலைவு, பிக்பாக்கெட் தொந்தரவு போன்ற அச்சங்களைத் தாண்டி சில உச்சங்களையும் தொட்டிருக்கிறது. அந்த உச்சங்களில் ஒன்று, விளையாட்டு வீரர்– வீராங்கனைகள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள். இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலேயே அதிகபட்ச ஆணுறை ஏற்பாடு ரியோவில்தான். ஒரு ‘சராசரி’ கணக்குப் பார்த்தால், ஒரு வீரருக்கு 42 ஆணுறைகள். ஒரு மைக்ரோ செகண்டில் தவறிப் போகிற பதக்கத்துக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிற ஒலிம்பிக்கில், ‘இதுக்கெல்லாம்’ நேரம் இருக்குமா என்று தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் போட்டிகள் ஒருபக்கம் களைகட்டுகின்றன என்றால், மறுபக்கம் பாலியல் லீலைகளும் பலே ஜோராகத்தான் நடக்கின்றன. ‘இதையெல்லாம் ஒரு ஜாலியான விளையாட்டாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்,

ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் நடப்பதை விளையாட்டு கிராமத்திலேயே விட்டுவிட வேண்டும்’ என்ற மனோபாவம் பலருக்கும் இருப்பதால், செக்ஸ் சாகசங்களுக்குக் குறைவில்லாமல் போய் விட்டது. இதற்கு முன் ஆணுறை விஷயத்தில் அசத்தியது, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிதான். இங்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆணுறைகள் தயாராக இருக்க, வீரர், வீராங்கனைகள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். எவ்வளவு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றன என்ற முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில்தான். அப்போதைய கணக்கான 8500, இன்றைய எண்ணிக்கைகளுடன் ஒப்பிடும்போது வெகு சொற்பம். இந்த ஒலிம்பிக் போட்டியில் இன்னொரு சுவாரசியம், ஆஸ்திரேலியர்கள் ‘ஸிகா வைரஸ் தாக்காத’ ஆணுறைகளை கொண்டுவந்தார்களாம்.

ஆக, ஒலிம்பிக் கிராமத்தில் ‘மஜா’வுக்குக் குறையில்லை என்று சிலர் கண்ணடித்தாலும், வேறு சிலர், அதெல்லாம் அவ்வளவு எளிதில்லை என்கிறார்கள். இதுதொடர்பாகக் கூறும் ஒரு வீரர், ‘‘ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் தங்கியாக வேண்டும். அது உசேன் போல்ட்டாக இருந்தாலும் சரி, மைக்கேல் பெல்ப்ஸாக இருந்தாலும் சரி. இன்னொரு வீரர் உடன் தங்குவார். இந்நிலையில், ஜோடியை வளைத்துக்கொள்வதும், ‘அதற்கு’ அமைத்துக்கொள்வதும் எளிதான விஷயமில்லை. ஒலிம்பிக் கிராமத்தில் நிறைய ஆணுறைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் ‘பயன்படுத்தப்படுகின்றன’ என்று உறுதியாய் கூற முடியாது’’ என்கிறார்.

ஆணுறைகள்
ஆணுறைகள்