உடல் அழகுக்கு நடிகை சமந்தா கூறும் இரண்டு இரகசியங்கள்

0
1
சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். சமந்தா எப்பொழுதுமே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாகவும், சதை போட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கின்றார்.

தமிழ் நடிகைகளிலே சில நடிகைகள் ஒரு சில படங்களுக்குப் பிறகு, உடல் எடை போட்டு, பெரிய பெண்கள் போல் தோற்றமளிப்பார்கள். ஆனால், சமந்தா அதற்கு வித்தியாசமாக இருக்கின்றார்.

அதற்கு அவர் கூறும் இரகசியங்கள் முக்கியமானதாகும். சமந்தா ஒரு பேட்டியில் தன்னுடைய உடல் அழகுப்பற்றி கூறும்பொழுது, உடற்பயிற்சியில், நான் பைத்தியம்.

எந்த நிலையிலும் அதை விடமாட்டேன். உணவு கட்டுப்பாடும் இருக்கிறது. இந்த இரண்டும்தான் எனது அழகின் ரகசியங்கள். ஒவ்வொரு புதிய வருடத்திலும் புத்தாண்டு சபதம் எடுத்து அதை நிறைவேற்ற உழைக்கிறேன்’’ என்றார்.