பாகுபலி சீரியல் ரெடி…. தேவசேனா கேரக்டரில் ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார்

0
1
பாகுபலி சீரியல்
பாகுபலி சீரியல்

பாகுபலி படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் கதையில் புதிய மெகா தொடர் இந்தி தொலைக்காட்சியில் தயாராக உள்ளது. இதற்கு அரம்ப் என பெயரிடப்பட்டுள்ளது.

பாகுபலி கதை அம்சம் கொண்ட இந்த தொடரில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்த தேவசேனா கேரக்டர் போல் இந்த தொடரில் கார்த்திகா (தேவசேனா) என்ற இளவரசி கேரக்டரில் நடிக்க உள்ளார். ஆனால் பாகுபலி படத்திற்கும் அரம்ப் சீரியலுக்கும் எவ்வித சம்பந்தம் இருக்காது என கூறப்படுகிறது.

பாகுபலி சீரியல்
பாகுபலி சீரியல்

சீரியலில் நடிப்பதற்காக நடிகை கார்த்திகா, வாள், யானை, குதிரை பயிற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் பிரபல தொலைக்காட்சி வாங்கி ஓளிபரப்ப உள்ளதாக கூறப்படுகிறது.