இது என்ன ஈனச் செயல்..! அமெரிக்காவை காரித்துப்பும் உலக பெண்கள் அமைப்புகள்..!

0
1
பேஸ்புக் நேரலை
பேஸ்புக் நேரலை

பேஸ்புக்  நேரலை வீடியோ பதிவை வெளியிட புதிய நவீன தொழில் நுட்பத்தை தனது வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் தொழில் நுட்பம் நல்லதைச்செய்ய வேண்டும். ஆனால் பேஸ்புக் தலைமையகம் உள்ள நாட்டிலேயே இப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வேதனைக்குறிய செயலாகும்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியை பேஸ்புக் நேரலையில் ஆறு பேர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

நேரலை வீடியோவை 40 பேர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் கூட இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

பின்னர் தன் மகளை காணவில்லை என வீடியோவில் இருந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு அவர் தாயிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில், இதில் சம்மந்தப்பட்ட 6 பேரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் இருந்த சிறுமியின் வீடியோவை பேஸ்புக் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் நிறவெறிக் கொள்கை அதிகமாகிவிட்டது. இந்தியா்கள் கடுமையாக தாக்கப்பட்டு வரும் நிலையில் கருப்பினத்தை சோ்ந்த சிறுமி ஒருவரை 6 போ் சோ்ந்து ரேப் செய்வது போன்ற காட்சி உலக பெண்கள் அமைப்பிடம் கடும் கண்டனத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.

என்ன கொடுமை சார் இது? சிறுமிகள், பெண்கள்  எங்கதான் போவாங்க? வளா்ந்த நாடுகளிலும் இதுதான் பிரச்சனை, வளரும் நாடுகளிலும் இதுதான் பிரச்சனையாக உள்ளது.