50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத எஸ்.ஜே சூர்யா… காரணம் என்ன தெரியுமா?

0
1
எஸ்.ஜே சூர்யா
எஸ்.ஜே சூர்யா

50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத எஸ்.ஜே சூர்யா… காரணம் என்ன தெரியுமா?

எஸ். ஜஸ்டின் செல்வராஜ் என்ற இயற்பெயரை கொண்டர் எஸ்.ஜே சூர்யா. இவர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவ நல்லூரை சேர்ந்தவர்.

கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர் பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடி ஒரு வழியாக சினிமா சான்ஸ் கிடைத்தது.

ஆசை, உல்லாசம் போன்ற படங்களில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார்.

உல்லாசம் படத்தில் வேலை பார்த்தபோது அஜித்துடன் நட்பாக அவரிடம் வாலி கதையை சொல்லி உள்ளார்.

அஜித்தும் வாய்ப்பு தரவே, வாலி படத்தை எடுத்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனை அடுத்து விஜயை வைத்து குஷியை எடுத்தார். அதுவும் பம்பர் ஹிட். அதன்பின்னர் அவரே நியூ படத்தை நடித்து இயக்கினர்.

இதனை அடுத்து அன்பே ஆருயிரே என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் நடித்தபோது அதன் கதாநாயகி நிலாவுக்கும் இவருக்கும் காதல் என்ற கிசுகிசு பரவியது.

இதனை இருவரும் மறுத்தனர். தமிழ் தெலுங்கு, இந்தி பல படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

1968ல் பிறந்த இவருக்கு தற்போது 49 வயதாகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதற்கு காரணம் ஒரு நடிகையின் காதல் தோல்வியே என்று கூறப்படுகிறது.