கோடையில் முகப்பரு வராமல் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம்!

0
1
முகப்பரு
முகப்பரு

கோடையில்தான் குளிர்காலங்களைவிட அதிகமாக முகத்தில் அழுக்குகள் தங்கும். அதோடு மட்டும் இல்லாமல் கோடை வெயில் அதிகம் தாக்கும் பகுதி முகத்தில்தான்.

இதன் காரணமாகவே முகத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றது. வறண்டு போதல், பருத்தொல்லை, தோல் சுருக்கங்கள், சருமம் கருத்து போவது உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

இதனை எப்படி சமாளிக்கலாம்:

முகத்தை நாம் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வந்த உடன் நாம் முகத்தில் உபயோகித்த மேக்கப்பை உடனடியாக நன்று கழுவி விடவேண்டும்.

முகம் கழுவும்போது முகத்தசைகளை அதிகமாக அழுத்தியோ அல்லது தேய்த்தோ கழுவக்கூடாது. அப்படி கழுவினால் சருமம் சுருக்கம் அடைய வாய்ப்புள்ளது.

அலுவலகம் அல்லது வீடுகளில் இருக்கும்போது முகத்தை அடிக்கடி தொட்டு பார்க்க கூடாது. விரல்களில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்தில் உள்ள சருமத் துளைகளின் வழியாக உள்ளே செல்லும். இதனால் சரும பிரச்சனைகள் ஏற்படும்.

கோடை நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. இதனால் முகப்பரு ஏற்படுவது தவிர்க்கப்படும்.