அக்குள் பகுதி கருப்பாக இருக்கிறதா?… இதோ ஈஸியா போக்கலாம்…

0
1
அக்குள்
அக்குள்

அக்குள் பகுதியை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால், பிரியங்கா சோப்ராவை போல் சர்ச்சையை ஏற்படுத்தும் அளவுக்கு அழகான இடம் தான் அக்குள். கைகளுக்கு அடியில் உண்டாகும் வேர்வை வெளியேற வலியில்லாததால், சருமத்துக்குள்ளேயே தேங்கிவிடுகிறது.

அதனால், அந்த பகுதி கருப்பாகிவிடுகிறது. அதை எப்படி சரிசெய்யலாம் என, பிரபல அழகுக்கலை நிபுணர்கள் பலரும் பல்வேறு குறிப்புகளைத் தருகிறார்கள்.

அக்குள் பகுதிகளில் உள்ள முடிகளை அவ்வப்போது ஷேவ் செய்திடுங்கள்.

தோளில் படும்படியான டியோடரண்டுகளைத் தவிர்த்திடுங்கள். அது சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கும்.

கிளைக்கோலிக், ஆக்சாலிக் அமிலங்கள் கொண்ட கிரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவதால் சருமம் மென்மையாவதோடு, கருமையும் நீங்கும்.

வெயிலில் வெளியே செல்லும்போது, ஸ்லீவ் லெஸ் உடைகள் அணிய வேண்டாம். அடிக்கடி மாய்ச்சரைஸர், கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுங்கள்.

குங்குமப்பூ நல்ல பலனைத் தரும். சிறிது குங்குமப்பூவை எடுத்து சில துளிகள் பால் விட்டு பேஸ்ட்டாக்கிக் கொண்டு, அக்குள் பகுதிகளில் தடவி வந்தால், அப்பகுதிகளில் உள்ள கருமை நீங்கி, சருமம் பளிச்சிடுவதை உணர்வீர்கள். நல்ல நிறம் கொடுப்பதோடு, உங்கள் அக்குள் பகுதியை வாசனையாகவும் வைத்திருக்கும்.

அதேபோல், ஆப்பிள் பழத்தைக் குழைத்தும் தடவலாம்.

மஞ்சள், வெள்ளரிக்காய், பால், எலுமிச்சை ஆகியனவும் அக்குள் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்கி பளபளப்பாக்கும்.