நீங்கள் பெண்களிடம் அழகான முறையில் தோற்றமளிக்க சில வழிகள்

0
1
பாலியல் கவர்ச்சி
பாலியல் கவர்ச்சி

உளவியல் ஆராய்ச்சி ஒன்று கூறுகையில், உலகில் உள்ள அதிகமான பெண்கள், ஆண்களை பாலியல் கவர்ச்சியாகவும் மற்றும் உடல் அழகான தோற்றமாக இருப்பதையுமே விரும்புகின்றார்கள்  என்று கூறுகின்றது.

இதில், சின்ன சின்ன வித்தியாசங்கள் வேண்டும் என்றால் இருக்கலாம். வித்தியாசம் என்றால், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான உடல் ரீதியான வித்தியாசங்கள் தான் அது. மற்றபடி ஒன்றுமில்லை.

அப்படியென்றால், பெண்கள் நம்மை விரும்புவதற்கேற்ப நாம் எவ்வாறு இருப்பது? அது தொடர்பான தகவல்கள் ஏதும் அந்த ஆய்வுகள் கூறியுள்ளதா? என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.

தற்பொழுது, அதைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பெண்கள் நம்மை விரும்புவதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம்.

1. பெண்களை அழகான முறையில் கிண்டல் செய்யுங்கள். அதாவது, பெண்கள் எப்போதுமே சகஜமாக இருப்பவர்களை அதிகமாக விரும்புவார்கள்.

2. இரண்டு விஷயங்களை தவிருங்கள். ஒன்று, சோகமாக இருப்பது. மற்றொன்று, பயந்த நிலையில் இருப்பது. இந்த இரண்டையுமே பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

3. உங்களை எப்பொழுதுமே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உயர்ந்த நிலையில் கருதுங்கள்.

4. உங்களுடைய பார்வை அனுபவப்பார்வையாக இருக்க வேண்டும்.

5. முகத்தில் குறைவான மற்றும் அழகான தாடியை வைத்துக் கொள்ளுங்கள்.

6. உடல் தோற்றத்தை அழகாக்குங்கள். குறிப்பாக, உங்களுடைய கை தசைகள் அழகாக இருக்க வேண்டும்.

7. அன்பாக இருங்கள். அடக்குமுறையை எப்பொழுதும் கையாளாதீர்கள்.

8. கோபத்தை எப்பொழுதும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிப்படுத்தாதீர்கள்.

9. முக்கியமான விழாக்களில் சிவப்பு உடை அணியுங்கள். இந்த வழிமுறைகளையெல்லாம், பெண்களிடம் நீங்கள் அழகாக தோற்றமளிக்க காரணமாக இருக்கும் என்று அந்த ஆய்வு கூறுகின்றது. பின்பற்றி பாருங்கள்.