உங்களுக்கு எந்த மாதிரியான சருமங்கள் இருக்கின்றது? சருமம் பற்றிய தகவல்

0
1
சருமம்
சருமம்

உங்கள் சருமத்தை பராமரிக்க விரும்புபவர்கள் முதலில் தங்கள் சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சருமங்களில் வகைகள் இருக்கின்றதா? என்று யோசிப்பீர்கள்.

பெரும்பலானவர்கள் தங்களின் தோலின் தன்மை பற்றி அதிகம் அறிந்து தெரிந்திருப்பதில்லை. வறண்ட சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும், எண்ணெய் பசையான சருமத்திற்கு தேவைப்படும் பராமரிப்பும் வெவ்வேறு வகையானது.

சருமத்தின் தன்மையை அறிந்து கொள்ள சில எளிய வழிகள்

சாதாரண வகை சருமத்தை கொண்டவர்களை அதிர்ஷ்டசாலிகள் எனலாம். இந்த சருமம் வறட்சியாகவும் இருக்காது. எண்ணெய் பசையோடும் இருக்காது. அதே போல இந்த வகை சருமத்தில் வெடிப்புகளும் ஏற்படாது. நாள் முழுவதும் ஒரே மாதிரி காணப்படும்.

மதியப் பொழுதுகளில் எண்ணெய்ப் பசையான சருமத்தை கொண்டவர்களின் தோல் பிசிபிசுப்பாக காணப்படும். முகப் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் இந்த சருமத்தில் தோன்ற வாய்ப்ப்புகள் அதிகம். எனவே இத்தகைய சருமத்தை கொண்டவர்கள் தங்கள் சருமத்தின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முகத்தை சுத்தம் செய்ய சாலிசிலிக் அமிலம் கொண்ட முகம் கழுவும் சோப்புகளை பயன்படுத்துவது பயனளிக்கும்.

குளிர் காலங்களில் வறண்ட சருமம் வகை ரப்பர் போல நீட்சி அடையக் கூடியதாக இருக்கும். சில நேரங்களில் சிரிப்பது முதலான முகத்தை அசைய வைக்க கூடிய செயல்கள் வழியும் ஏற்படுத்தலாம். மற்ற சருமங்களோடு ஒப்பிடும்போது சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையக் கூடியது இந்த சருமம். சருமத்தை எப்போதும் ஈரப்பசையோடு வைத்திருப்பது பாதிப்புகளை தடுக்க உதவும்.

தோலில் தடிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இந்த வகை சென்ஸிடிவ் சருமத்தில் ஏற்படும். இந்த வகை சருமத்தை உடையவர்கள் தோல் மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்கலாம்.