இவை ஆண்களுக்கானது!…

0
1
ஆண்
ஆண்

அழகுப்படுத்திக்கொள்ளுதல் என்பது பெண்களுக்கு மட்டும்தான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை  அழகுபடுத்திக் கொள்ளலாம்.

 முகம்

அதிகமான ஆண்கள் தங்கள் முகத்தினை அழகுபடுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை.

அவர்கள் முகத்தினை அழகுபடுத்துதல் என்பது பெரும்பாலும் ஷேவிங் செய்வது மற்றும் மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்து விடுகிறது.

அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சில ஆண்கள் மட்டும்  பெண்களைப்போல `ஃபேசியல்’ செய்து முக அழகை மெருகூட்டிக் கொள்கிறார்கள்.

அதிகாலையில் ஷேவிங் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடித்துப் போகிறது என்கிறது சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பு.

ஆகவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முக அழகினை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்

பொதுவாக பெண்கள் ஆண்களிடம் ஆண்மையை ம ட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.

ஆண்களின் சருமம் இயற்க்கையாகவே கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.

அவர்கள் இதில் கவனம் செலுத்தி சரும பராமரிப்பை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியினை அதிகம் வளரவிடக்கூடாது.

இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.

அதே வேளையில் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

பற்கள்

சிரிப்பின் அழகே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் மேலும் கூட்டும்.

டீ- காஃபி அருந்துவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிப்பிற்குள்ளாகிறது.

பற்களின் நிறத்தை வென்மையாக மாற்ற  பலவித சிகிச்சை முறைகள் உள்ளன.தினமும் இருமுறை பல் துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

கூந்தல்

ஆண்களும் தங்கள் தலைமுடியை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

கவர்ச்சியாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் முடியின் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.

முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடியினை நன்கு பராமரிக்கலாம்.

உடை

உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது,எளிதானதும்கூட.

கோட்டு-சூட்டு, டை என்று வருவதுதான் அழகான ஆடை என்று எண்ணிவிடாதீர்கள்.

சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானதே.

அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்’ செய்து அணிவது சிறந்தது.

இதுவும் அழகு தான்

கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அழகு. நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.

நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.