தாஜ்மகால் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள்!

0
1
தாஜ்மகால்
தாஜ்மகால்

தாஜ்மகால் அதிகாலை பின்க் நிறத்திலும், நாள் வேளையில் வெள்ளை நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் கோல்டன் நிறத்திலும் காட்சியளிக்கும்.

தாஜ்மகாலின் தூண்கள், வெளிப்புறத்தில் சாந்திருப்பது போன்று தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூகம்பம் வந்தாலும் கூட, அவை கட்டிடத்தின் மீது விழாமல், வெளிப்புறத்தில் தான் விழும்.

மிக ரம்மியமான இந்த கட்டிடத்தை கட்ட 28 வகையான விலைமதிப்பற்ற சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டன.

அந்த காலத்தில் தாஜ்மகாலை கட்டிமுடிக்க, 32 மில்லியன் இந்திய பணம் செலவாகி இருக்கலாம் என்றும். அதன் இன்றைய மதிப்பு, 1 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளை தாஜ்மகாலை போலவே, கருப்பு தாஜ்மகால் ஆறுக்கு மறுபுறம் கட்டும் யோசனை இருந்தது.

பேரரசர் ஷாஜகான், தாஜ்மகாலை கட்டிமுடிதவுடன், கட்டிட பணியில் வேலை செய்த அனைவரின் கைகளையும் வெட்டிவிட கூறினார் என்றும், தாஜ்மகால் போன்ற மற்றொரு கட்டிடம் உருவாகிவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்றும் வரலாற்று தகவல்களின் மூலம் அறியப்படுகிறது.

தாஜ்மகாலை கட்ட, கட்டிட பொருட்களை கொண்டுவர 1000 யானைகள் பயன்படுத்தப்பட்டன.

22 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 22,000 பேர் வேலை செய்துள்ளனர்.